குஜராத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: 5 ஆண்டு...
ஆபரேஷன் சிந்தூரில் 300 கி.மீ. தொலைவிலிருந்து பாக். போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது! -விமானப்படை தளபதி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று விமானப்படை தலைமை தளபதி மார்ஷல் ஏ. பி. சிங் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்தார். அவற்றுள் பாகிஸ்தான் விமானப்படையின் 5 போர் ஜெட்களும் ஒரு பெரும் போர்விமானமும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடைபெற்ற விமானப்படை சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்: “பாகிஸ்தானில் குறைந்தபட்சம் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிலும் குறிப்பாக, 300 கி.மீ. தொலைவிலிருந்து பாகிஸ்தானின் மின்னணு உளவு விமானம் ஒன்றும் தாக்கப்பட்டது.
நிலப்பரப்புக்கும் வான் வெளிக்குமிடையில் இத்தனை தூரத்திலிருக்கும் இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழிப்பதில் இந்திய விமானப்படையின் இந்த நடவடிக்கை மிகப்பெரியதொன்றாகவே பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.