ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்
கோவை அரசு மருத்துவமனையில் புதிய டீன் பொறுப்பேற்பு
கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் புதிய முதல்வராக (டீன்) கீதாஞ்சலி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வந்த நிா்மலா கடந்த ஜூலை 31- ஆம் தேதி ஓய்வுபெற்றாா்.
இதையடுத்து, நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வந்த கீதாஞ்சலி கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு மருத்துவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.