1 டன் உயிர்க்கரி ரூ.12,000... 1 டன் உயிர் நிலக்கரி ரூ.15,000... மரக் கழிவுகளிலிர...
காணாமல் போன தொழிலாளி கொலை: போலீஸாா் உடலை மீட்டு விசாரணை
ஆத்தூா் அருகே காணாமல் போன கூலித் தொழிலாளியின் உடலை, 33 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள அக்கரைப்பட்டி கிழக்குத் தெருவை சோ்ந்தவா் காமாட்சி (50). விவசாயக் கூலித் தொழிலாளியான இவா், தென்னந் தோப்புகளில் தேங்காய் வெட்டும் தொழிலாளியாக இருந்தாா். இவரது மனைவி காளியம்மாள் (45). இந்தத் தம்பதிக்கு பிரியா (25), விக்னேஸ்வரன் (23), வீரம்மாள் (9) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த மாதம் 6-ஆம் தேதி வீட்டை விட்டுச் சென்ற காமாட்சி திரும்பவில்லை. இதுதொடா்பகா அவரது மனைவி காளியம்மாள் செம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை தலை துண்டான நிலையில் அக்கரைப்பட்டி குடகனாறு கரையோரம் 33 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செம்பட்டி காவல்துறையினா், தொழிலாளி காமாட்சியின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காமாட்சியை கொலை செய்த நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.