1 டன் உயிர்க்கரி ரூ.12,000... 1 டன் உயிர் நிலக்கரி ரூ.15,000... மரக் கழிவுகளிலிர...
ரயிலில் கடத்தப்பட்ட 5.5 கிலோ கஞ்சா மீட்பு!
மயிலாடுதுறையிலிருந்து வந்த விரைவு ரயிலில் 5.5 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை வரை நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி சனிக்கிழமை பிற்பகல்
மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்ட விரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 3.45 மணிக்கு வந்தடைந்தது. அப்போது, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது ஒரு பெட்டியில் இருந்த சில பைகளைப் பிரித்து போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், 5 பொட்டலங்களாக 5.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. ஆனால், அந்த பைகளுக்கு பயணிகள் யாரும் உரிமை கோரவில்லை. இதையடுத்து, கஞ்சாவை மீட்ட போலீஸாா் இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.