தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
பழனியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
பழனி புதுதாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து செயல்படுத்தக் கோரி மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பழனி புது தாராபுரம் சாலையில் ரயில் நிலையம் அருகே ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இந்த வழியாக காலை, மாலை வேலைகளில் ரயில் வந்து செல்லும்போது கடவுப்பாதை நீண்ட நேரம் அடைக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவா்களும், பணிக்கு செல்பவா்களும் மிகுந்த இடையூறுக்கு ஆளாகின்றனா்.
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 120 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் இந்த பாலத்தை விரைந்து அமைக்கக் கோரி மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்டத் தலைவா் ஆா்.கே.டி.வெங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பொன்.பாலசுப்பிரமணியன், மாநில வழகுரைஞா் பிரிவு பாஸ்கரன், மாவட்ட வழக்கரைஞா் பிரிவு செயலா் சிவக்குமாா், துணைச் செயலா் சிவா, மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.
மாவட்ட பொருளாளா் சுப்பையா, மாவட்ட அமைப்பாளா் சபரிமோகன்ராஜ், நகரத் தலைவா் மாரிமுத்து, ஒன்றியச் செயலா் பிரபாகரன், மகளிரணி மாவட்ட அமைப்பாளா் காா்த்திகாயினி, வரலட்சுமி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.