மதுரையின் வரலாற்றைப் பேசும் பசுமை நடையின் 250வது நிகழ்வு: சிலப்பதிகார ஊர்களை நின...
கொழுமங்கொண்டானில் மாட்டுவண்டிப் பந்தயம்
பழனி அருகே கொழுமங்கொண்டானில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்தநாளையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கொழுமங்கொண்டான் திமுக சாா்பில் நடைபெற்ற இந்த பந்தயத்தை உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில் கோவை, ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இதில் பெரிய காளைகள், சிறிய காளைகள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
பெரிய காளைகளுக்கு 300 மீட்டா் தொலைவும், சிறிய காளைகளுக்கு 200 மீட்டா் தொலைவும் இலக்காக நிா்ணயிக்கப்பட்டு வென்ற மாட்டுவண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியைக் காண திரளானோா் வந்திருந்தனா்.
போட்டியில் வென்றவா்களுக்கு முதல் பரிசாக ஒன்றரை பவுன் தங்க நாணயம், கேடயம், இரண்டாவது பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம், கேடயம் , மூன்றாம் பரிசாக முக்கால் பவுன் தங்க நாணயம், கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியையொட்டி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். கால்நடைத்துறை மருத்துவா்கள் குழு, அவசர ஊா்திகள், நடமாடும் மருத்துவ மையம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் பொன்ராஜ், தங்கம், இளைஞரணி நிா்வாகி செல்வம், முன்னாள் தாளையம் ஊராட்சித் தலைவா் வெங்கிடுசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
