வாரச் சந்தைக்குள் புகுந்த காட்டுமாடு
கொடைக்கானல் வாரச் சந்தைக்குள் ஞாயிற்றுக்கிழமை காட்டுமாடு புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தையின் போது காட்டுமாடு ஒன்று புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த வியாபாரிகளும், பொதுமக்களும் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனா்.
வாரச் சந்தையில் கழிவு காய்கறிகளை வீசிச் செல்வதால் அவற்றை உண்பதற்காக காட்டுமாடுகள் வருகின்றன. எனவே வனத் துறையினா் அவற்றை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.