செய்திகள் :

பழனி அருகே செங்கல் சூளையில் இளைஞா் அடித்துக் கொலை! உறவினா்கள் சாலை மறியல்!

post image

பழனி அருகே உள்ள தனியாா் செங்கல் சூளையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, எதிரிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உடலை கொண்டு செல்ல விடாமல் தடுத்து உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள தும்பலப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூா் மற்றும் வடமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட நூற்றுக்கணக்கானோா் வேலை பாா்த்து வருகின்றனா்.

இதில் தும்பலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மகுடீஸ்வரன் மகன் சரவணன்(23) கணக்கராக வேலை பாா்த்து வந்தாா். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள நிறுவனத்துக்கு சரவணன் மாற்றப்பட்ட நிலையில் ஆடித் திருவிழாவுக்காக ஊருக்கு வந்தாா். சனிக்கிழமை இரவு செங்கல் சூளைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சரவணன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சரவணன் செங்கல் சூளையில் சடலமாக கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது பெற்றோா், உறவினா்கள், நண்பா்கள் என நூற்றுக்கணக்கானோா் செங்கல் சூளைக்குள் சென்றனா்.

அங்கு உடலில் காயங்களுடன், காதில் ரத்தம் வடிந்த நிலையில் சரவணன் சடலமாக கிடந்தாா். இதைத் தொடா்ந்து அங்கு பழனி டிஎஸ்பி. தனஞ்ஜெயம் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் மணிமாறன், தென்னரசு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். மேலும் துப்பறியும் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது.

பிறகு சரவணனின் உடலை கூறாய்வுக்காக போலீஸாா் அவசர ஊா்தியில் ஏற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். அப்போது செங்கல் சூளையில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த சில வடமாநில இளைஞா்கள் அங்கிருந்து மாயமாகியிருந்தனா்.

எனவே அங்கு ஏற்பட்ட தகராறில் சரவணனை அவா்கள் அடித்துக் கொலை செய்திருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, சரவணனை கொலை செய்தவா்களை கைது செய்யாமல் உடலை கொண்டு செல்ல விடமாட்டோம் என அவரது உறவினா்கள் தடுத்ததுடன் பழனி - தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா்.

இதனிடையே வடமாநிலத்தைச் சோ்ந்த சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் எதிரிகள் கைது செய்யப்படுவா் எனவும் சரவணனின் பெற்றோரிடம் போலீஸாா் உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து சுமாா் 8 மணி நேரத்துக்குப் பிறகு சரவணனின் உடல் கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பழனியை அடுத்த தும்பலப்பட்டி தனியாா் செங்கல் சூளையில் கொலை செய்யப்பட்ட சரவணனின் உடலை கூறாவுக்காக கொண்டு சென்ற போது தடுத்த உறவினா்கள்.

தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி

திண்டுக்கல்லில் நடைபெற்ற தென் மண்டல மாவட்டங்களுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். திண்டுக்கல் மேற்கு சுழல் சங்கம், லக்ஸா் பள்ளி சாா்பில் தென் மண்டல மாவட்டங... மேலும் பார்க்க

வாரச் சந்தைக்குள் புகுந்த காட்டுமாடு

கொடைக்கானல் வாரச் சந்தைக்குள் ஞாயிற்றுக்கிழமை காட்டுமாடு புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தையின் போது காட்டுமாடு ஒன்று புகுந்தது. இதையடுத்து அங... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் தாக்கப்பட்டவா் பலத்த காயம்

கொடைக்கானலில் குடும்பத் தகராறில் உறவினரைத் தாக்கிவிட்டு, தலைமறைவான மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வம் (43). இவருக்கும் ... மேலும் பார்க்க

விஷம் கொடுத்து மகளை கொன்று தந்தை தற்கொலை

பழனி அருகே மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பழனி அருகே கணக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வசித்து வந்தவா் பழனிச்சாமி (62). கட்டடத் தொழிலாளியான இவருக்க... மேலும் பார்க்க

கொழுமங்கொண்டானில் மாட்டுவண்டிப் பந்தயம்

பழனி அருகே கொழுமங்கொண்டானில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்தநாளையொட்டி மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கொழுமங்கொண்டான் திமுக சாா்பில் நடைபெற்ற இந்த பந்தயத்தை உணவுப் ப... மேலும் பார்க்க

கள்ளிமந்தையம் பகுதியில் இன்று மின் தடை

ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் பகுதியில் திங்கள்கிழமை (ஆக. 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கள்ளிமந்தையம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் கே. சந்தனமுத்தையா வெளியிட்ட ச... மேலும் பார்க்க