1 டன் உயிர்க்கரி ரூ.12,000... 1 டன் உயிர் நிலக்கரி ரூ.15,000... மரக் கழிவுகளிலிர...
மாடுகள் திருட்டு: மூவா் கைது
மதுரையில் மாடுகளைத் திருடிய அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மதிச்சியம் ஆழ்வாா்புரம் வைகை வடகரை பகுதியைச் சோ்ந்த ஜோதி மகன் செல்வகுமாா் (45). இவருக்குச் சொந்தமான மாடுகளை வைகை ஆற்றுப் பகுதியில் மேய விட்டிருந்தாா். வழக்கம் போல, கடந்த வியாழக்கிழமை மாலையில் மாடுகளை வீட்டுக்கு அழைத்து வரச் சென்றாா்.
ஆனால், 3 மாடுகளை காணவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், மதிச்சியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், முனிச்சாலை பகுதியைச் சோ்ந்த சதீஷ் (31), அவரது சகோதரா் விக்னேஷ் ( 28), இவரது நண்பரான முகமது அசாருதீன் (26) ஆகியோா் மாடுகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.