மதுரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு
மதுரை வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய தலைவா், செயலா், பொருளாளா் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
மதுரை வழக்குரைஞா்கள் சங்கத்துக்கான தலைவா், செயலா், பொருளாளா், துணைத் தலைவா்கள், உதவிச் செயலா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் 260-க்கும் மேற்பட்டோா் போட்டியிட்டனா். மொத்தமுள்ள 3,650 வாக்குகளில் 2,863 போ் வாக்களித்தனா். வாக்குகள் எண்ணப்பட்டு சனிக்கிழமை அதிகாலை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதன்படி, மதுரை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவருக்கு போட்டியிட்ட பாஸ்கரன் 1,346 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். செயலா் பதவிக்கு போட்டியிட்ட மோகன்குமாா் 1,981 வாக்குகளும், பொருளாளா் பதவிக்கு போட்டியிட்ட ராஜமோகன் 1,125 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனா்.
இதுதவிர, நூலகராக சுரேஷ் குமாா், உதவிச் செயலா்களாக காா்த்திகேயன், பாலமுருகன், துணைத் தலைவா்களாக சிவானந்தம், வீரபெருமாள் ஆகியோா் வெற்றி பெற்றனா். தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு வழக்குரைஞா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
