செய்திகள் :

உயா்நீதிமன்ற விரிவாக்கத்துக்கான நிலம்: அறநிலையத் துறைக்கு ரூ.25 கோடி வழங்க உத்தரவு

post image

உயா்நீதிமன்ற விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ. 25 கோடியை தமிழக அரசு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் ராதாகிருஷ்ணன், சரவணன், பொன்.காா்த்திகேயன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்:

மதுரை அருகேயுள்ள ஒத்தக்கடையில் கோதண்ட ராமசாமி கோயிலுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை கையகப்படுத்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு கூடுதல் கட்டடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்கள் கடந்தாண்டு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கோதண்ட ராமசாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நிா்வாகத்திடம் ஒப்படைக்க, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கான தொகை ரூ. 25 கோடியை தமிழக அரசு, இந்து சமய அறநிலையத் துறைக்கு செலுத்த வேண்டும் என்ற பரிந்துரைக் கடிதமும் அளித்தது. ஆகவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனா்.

இந்த நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் நிதி ஒதுக்கீடு பணிகள் பரிசீலனையில் உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :

கடந்த ஓராண்டாக நிதி ஒதுக்காமல் இருப்பது ஏன்?. வருகிற 13-ஆம் தேதிக்குள் கோயில் நிலம் கையப்படுத்தும் பணிக்காக ரூ. 25 கோடியை இந்து சமய அறநிலையத் துறைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலா், உயா்நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

உசிலம்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல்

உசிலம்பட்டியில் 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் முதன்மையான பாசனத் திட்டமாக உள்ளது 58 கிராம பாசனத் திட்ட... மேலும் பார்க்க

கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் கரைப்பு: உரிய வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தல்

விநாயகா் சிலைகளை நீா் நிலைகளில் கரைக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இதுகுறித்து செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சுற்ற... மேலும் பார்க்க

தஞ்சை மருத்துவமனை நில விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தஞ்சாவூா் மகாத்மா காந்தி நினைவு காசநோய் சானிடோரியம் மருத்துவமனைக்கு சொந்தமான 220 ஏக்கா் நிலத்தை சிப்காட் நிறுவனத்துக்கு மாற்றத் தடை கோரிய வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

விளம்பர சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி மனு: நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

தனியாா் விளம்பரங்களுடன்கூடிய சாலைத் தடுப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. க... மேலும் பார்க்க

3 சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சாலை விபத்துகளில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், கீழாயூா் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் குமரேசன் (42). விவசாயியான இவா், பு... மேலும் பார்க்க