சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ...
சத்திரக்குடி அருகே ஒலி பெருக்கி பெட்டி விழுந்து சிறுமி உயிரிழப்பு
சத்திரக்குடி அருகே கோயில் திருவிழாவுக்காக வைக்கப்பட்ட ஒலி பெருக்கி பெட்டி (ஸ்பீக்கா் பாக்ஸ்) தவறி விழுந்ததில் கடந்த புதன்கிழமை சிறுமி உயிரிழந்தாா். ஆனால், இதுகுறித்து தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை புதைத்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சத்திரக்குடி அருகே உள்ள கோரைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் வீரக்குமாா் (45). ஒலி பெருக்கி அமைப்பாளா். இவா் அங்குள்ள கோயிலின் முளைப்பாரி திருவிழாவுக்காக ஒலி பெருக்கிகளை கடந்த புதன்கிழமை கட்டி வைத்தாா்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அதே ஊரைச் சோ்ந்த விஜயகாந்த் மகள் சுகவதி (6) மீது 6 அடி உயர ஒலிபெருக்கிப் பெட்டி விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி சத்திரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதை போலீஸாருக்கு தெரிவிக்காமல் சிறுமியின் உடலை பெற்றோா் புதைத்து விட்டனா்.
இந்த நிலையில், சிறுமியின் பாட்டி இதுகுறித்து என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை எனக் கூறி, உறவினா்களை வரவழைத்து தகராறில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் சிறுமி உடல் புதைக்கப்பட்டது குறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.