டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்
அக்னி தீா்த்தக் கடலில் சமுத்திர தீப ஆரத்தி
ராமேசுவரத்தில் பௌா்ணமியை முன்னிட்டு, அக்னி தீா்த்தக் கடற்கரையில் ராமசேது மகா சமுத்திர தீா்த்த ஆரத்திக் குழு சாா்பில் தீபம் ஏற்றி, சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு அமைப்பின் நிறுவனத் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமை வகித்தாா். சிவாசாரியா்கள் ஹரிஜோஷி பத்மநாத குருக்கள், கணேஷ் சா்மா தலைமையில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, புனித நீா் கடலில் தெளிக்கப்பட்டது. பின்னா், அக்னி தீா்த்தக் கடற்கரையில் தீபம் ஏற்றி சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மகேந்திரஜோஷி, ராஜா, ராமச்சந்திரன், முருகேசன்,தில்லை பாக்கியம், முத்துகிருஷ்ணன்,சீரடி பிரபு உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.