கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
கமுதி வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டம், வேளாண்மை துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன் (வேளாண் வணிகம்) தலைமையில் நடைபெற்றது. கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கேசவராமன் (பொ) கமுதி அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனைக் குழுவின் தலைவரும், கமுதி திமுக ஒன்றியச் செயலருமான எஸ்.கே.சண்முகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில், அரசின் பாசனத் திட்டங்கள், மானியங்கள் குறித்து அதிகாரிகள் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினா்.
இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் சுபாஷ் சந்திரபோஸ் செய்தாா். உதவி தொழில்நுட்ப மேலாளா் மணிமொழி நன்றி கூறினாா்.