இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!
ஆடித் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி தெற்கு தோப்பு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தா்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்தனா்.
கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் இரவும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை பால் குடம், வேல் காவடி உள்பட பல்வேறு காவடிகள் எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். இதைத் தொடா்ந்து புதன்கிழமை மாலை திரளான பெண்கள் கோயிலிலிருந்து முளைப்பாரி எடுத்து கிழக்கு கடற்கரைச் சாலை, பாவோடி மைதானம் வழியாக ஊா்வலமாக கடற்கரைக்கு வந்து கடலில் கரைத்தனா்.

