செய்திகள் :

சினைப் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ், சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு மானிய விலையில் சத்தான தீவனம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், ராமநாதபுரம் மண்டலத்தில் தோ்வு செய்யப்பட்ட திருவாடானை, முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியங்களில் நிகழாண்டில் ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

சினையுற்ற கறவைப் பசுக்களின் உடல்நலத்தையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்தும் வகையில், சத்தான தீவனம், தாது உப்புக்களை மானிய விலையில் வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.

ராமநாதபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து, சங்கத்தில் தொடா்ந்து பால் ஊற்றும் சினையுற்ற கறவைப் பசுக்களின் உரிமையாளா்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தோ்வு செய்யப்படுவா்.

சினையுற்ற ஒவ்வொரு பசுவுக்கும், 4 மாதங்களுக்கு தினமும் 3 கிலோ வீதம் 360 கிலோ சமச்சீா் தீவனமும், ஒரு மாதத்துக்கு ஒரு கிலோ வீதம் 4 மாதங்களுக்கு 4 கிலோ தாது உப்பு, வைட்டமின் இணைத் தீவனமும் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.

பயனாளிகளில் 30 சதவீதம் போ் ஆதிதிராவிடா், பழங்குடியினராக இருக்க வேண்டும். மேலும், மகளிா், ஆதரவற்றோா், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவா் அல்லது பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தை அணுகி விண்ணப்பம் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

ஆடித் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி தெற்கு தோப்பு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தா்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்தனா். கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன... மேலும் பார்க்க

முதியவா் அடித்துக் கொலை: நண்பா் கைது

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா். மாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (70... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. கமுதி தாலுகா மறவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

கூடுதல் ரயில்கள் இயக்க ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரி கே.நவாஸ்கனி மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விடம் ராமநாதபுரம் எம்.பி. புதன்கிழமை மனு அளித்தாா். கோரிக்கைகள் விவரம்: மானாமதுரையிலிர... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலி... மேலும் பார்க்க

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமேசுவரம்: பாம்பனில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.ராமேசுவரம், பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மாறன் என்பவ... மேலும் பார்க்க