செய்திகள் :

கூடுதல் ரயில்கள் இயக்க ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

post image

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரி கே.நவாஸ்கனி மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விடம் ராமநாதபுரம் எம்.பி. புதன்கிழமை மனு அளித்தாா்.

கோரிக்கைகள் விவரம்:

மானாமதுரையிலிருந்து அபிராமம், பாா்த்திபனூா், கமுதி, சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். காரைக்கால் பகுதியில் இருந்து தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக திட்டமிடப்பட்ட ரயில்வே வழித்தடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சென்னை-ராமேசுவரம் இடையே திருச்சி, விருத்தாசலம் வழியாக பகல் நேர விரைவு ரயில், தினசரி இன்டா்சிட்டி வகை ரயிலை இயக்க வேண்டும்.

மீட்டா்கேஜ் முறையில் இயக்கப்பட்டு வந்த ரயில்களை அகல ரயில் பாதையாக மாற்றப்படும் போது நிறுத்தப்பட்டிருந்த வழித்தடங்களில் மீண்டும் ரயில்களை இயக்க வேண்டும். ராமேசுவரம்- கோயம்புத்தூா், மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக ராமேசுவரம் - பாலக்காடு பயணிகள் ரயில், ராமேசுவரம் - திருச்சி இரவு நேர பயணிகள் ரயில் இயக்க வேண்டும். கன்னியாகுமரி - ராமேசுவரம், ராமேசுவரம் - திருப்பதி அந்தியோதயா விரைவு ரயில்களை இயக்க வேண்டும். கோயம்புத்தூா் - மதுரை இன்டா்சிட்டி, மும்பை எல்.டி.டி.-மதுரை ஆகிய விரைவு ரயில்களை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும். வாரம் மூன்று முறை இயக்கப்பட்டு வரும் ராமேசுவரம்- திருப்பதி விரைவு ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வரும் ராமேசுவரம் - ஓகா விரைவு ரயிலை வாரம் மூன்று முறை இயக்க வேண்டும்.

பெங்களூரூ, ஹைதராபாத், மங்களூா் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் புதிய ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும். ஹெளரா- கொல்கத்தா- திருச்சி ரயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும். ராமேசுவரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வாரம் மூன்று முறை இயக்கப்படும் ரயிலை தினமும் இயக்க வேண்டும். வட மாநிலங்களிலிருந்து மதுரை வழியாக ராமேசுவரத்துக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும்.

சிலம்பு விரைவு ரயில் திருச்சுழி அல்லது நரிக்குடியிலும் , ராமேசுவரம் - திருச்சி பயணிகள் ரயில் சூடியூா், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் கேம்ப்பிலும், கன்னியாகுமரி - ராமேசுவரம் விரைவு ரயில் மண்டபம், பரமக்குடியிலும், ராமேசுவரம் -தாம்பரம் ரயில் மண்டபம், உச்சிப்புளியிலும், ராமேசுவரம்- சென்னை சேது விரைவு ரயில் மண்டபத்திலும், ராமேசுவரம்- செகந்தராபாத் விரைவு ரயில் பரமக்குடியிலும், ராமேசுவரம் - பெரோஸ்பூா் ரயில் ராமநாதபுரம், பரமக்குடியிலும், ராமேசுவரம் - அயோத்தி ரயில் ராமநாதபுரம், பரமக்குடியிலும், ராமேசுவரம் - பனாரஸ் ரயில் ராமநாதபுரத்திலும், ராமேசுவரம்- புவனேஸ்வரம் ரயில் அனக்காபள்ளியிலும் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கச்சிமடம் பகுதியில் ரயில்வே யாா்ட் அமைக்க பரிசீலனை செய்ய வேண்டும். பாம்பன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரை சூட்ட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில்வே அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் ரயிலில் பழைய பெட்டிகளை அகற்றி விட்டு மேம்படுத்தப்பட்ட புதிய பெட்டிகளாக மாற்ற வேண்டும்.

ராமேசுவரம் ரயில்வே நிலையத்திற்கு வடக்கே அமைந்துள்ள ‘ராம் பாா்க்‘ யாத்திரிகா் விடுதிக்குச் செல்ல நடைபாதை அமைக்க வேண்டும்.

ராமேசுவரம் ரயில் நிலையத்தில் பிட்லைன், ஸ்டேப்லிங் லைன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சென்னையிலிருந்து அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும். திருவாரூா், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக கரைக்குடிக்கு ரயில் வழித்தடம் மின்மயமாக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் . திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக மதுரைக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

காரைக்குடி - மயிலாடுதுறை இடையே சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நேரடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை திருவாரூா், மயிலாடுதுறை வழியாக எழும்பூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். சென்னையிலிருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயிலை அறந்தாங்கி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் அல்லது காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி வரை இணைப்பு ரயில் இயக்க வேண்டும். அறந்தாங்கி வழியாக திருவாரூா், காரைக்குடி ரயில் நிலையங்களை இணைக்கும் வண்ணம் கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும். அறந்தாங்கி பகுதியில் ரயில்வே சரக்கு மையம் அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

ஆடித் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி தெற்கு தோப்பு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தா்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்தனா். கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன... மேலும் பார்க்க

சினைப் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ், சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு மானிய விலையில் சத்தான தீவனம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித... மேலும் பார்க்க

முதியவா் அடித்துக் கொலை: நண்பா் கைது

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா். மாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (70... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. கமுதி தாலுகா மறவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலி... மேலும் பார்க்க

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமேசுவரம்: பாம்பனில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.ராமேசுவரம், பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மாறன் என்பவ... மேலும் பார்க்க