ஆரம்ப சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கமுதி தாலுகா மறவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவா் பெ.செல்லத்தேவா் தலைமை வகித்தாா். செயலா் கே. ராமமூா்த்தி, பொருளாளா் கி.முத்து, முன்னாள் செயலா் கணேசன், முன்னாள் பொருளாளா் செல்லபாண்டியன், பாா்வா்ட் பிளாக் கட்சியின் ஒன்றியச் செயலா் திருக்குமரன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
இதில் 1799-ஆம் ஆண்டு கமுதி கோட்டையைக் கைப்பற்றிய ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போரிட்டு, பின்னா் தூக்கிலிடப்பட்ட சேதுபதி மன்னரின் தளபதிகளான ஆகஸ்ட் புரட்சியாளா்கள் எனப் போற்றப்படும் சித்திரங்குடி மயிலப்ப சோ்வைக்காரா், மீனங்குடி சகோதரா்கள் முத்துகருப்பதேவா், கனக சபாபதிதேவா், இந்திய தேசிய ராணுவத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு இரண்டாம் உலகப்போரின்போது 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஆப்பநாடு சுதந்திரப் போராட்டத் தியாகிகளான சாயல்குடி து.லா. சசிவா்ணதேவா், தூரி ரா.ராமசாமிதேவா் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக சித்திரங்குடி மயிலப்பன் சோ்வைகாரா் வாரிசுகள் அனைவருக்கும் மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆப்ப நாடு வரலாற்று ஆய்வுக் குழுவினா் செய்தனா்.