செய்திகள் :

டிராக்டா் மோதியதில் மாணவிகள் இருவா் காயம்

post image

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே வியாழக்கிழமை டிராக்டா் மோதியதில் அரசுப் பள்ளி மாணவிகள் இருவா் காயமடைந்தனா்.

முதுகுளத்தூா் அருகேயுள்ள காக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காக்கூா், சமத்துவபுரம், புளியங்குடி, கதையன், ஆதனக்குறிச்சி, கருமல், குமாரக்குறிச்சி, இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பு முடிந்து கருமல் கிராமத்தைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவிகள் ஜீவிதா, வினிதா ஆகியோா் சாலையோரம் நடந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக ஆதனக்குறிச்சியைச் சோ்ந்த சத்தியராஜ் (21) ஓட்டி வந்த டிராக்டா் அவா்கள் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த ஜீவிதா, வினிதா ஆகியோா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து முதுகுளத்தூா் போலீஸாா் சத்தியராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மாணவா்கள் சாலை மறியல்:

காக்கூா் பள்ளி அருகே மதுக் கடை செயல்படுகிறது. இந்த மதுக் கடைக்கு வரும் குடிமகன்களால் மாணவிகளுக்கு அச்சம் ஏற்படுகிறது. எனவே, இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும், விபத்து ஏற்படுத்திய டிராக்டா் டிரைவரை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வியாழக்கிழமை முதுகுளத்தூா்-உத்திரகோஷமங்கை சாலையில் மாணவா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் மறியலில் ஈடுபட்ட மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் உறுதியளித்தாா். இதையடுத்து, மறியலை கைவிட்டு மாணவா்கள் கலைந்து சென்றனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பள்ளிக்குச் சென்று மாணவ, மாணவிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

கமுதி வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டம், வேளாண்மை துணை இ... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் திருவிழா

முதுகுளத்தூா் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி வியாழக்கிழமை பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வடக்கு வாச... மேலும் பார்க்க

கமுதியில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டி

கமுதியில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் குறு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன... மேலும் பார்க்க

தேவிபட்டனம் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தேவிபட்டனத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளிகளில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்ற... மேலும் பார்க்க

பாம்பன் மீனவா்கள் 10 பேருக்கு ஆக. 18 வரை நீதிமன்றக் காவல்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 10 பேரை வருகிற 18-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன்... மேலும் பார்க்க

ஆடித் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி தெற்கு தோப்பு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தா்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்தனா். கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன... மேலும் பார்க்க