சென்னை கிராண்ட்மாஸ்டா்ஸ்: 3-ஆவது சுற்றில் அா்ஜுன் எரிகைசி, விதித், கீமா், பிரனேஷ...
காளையாா்கோவில் ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளுக்கு மின்கல ஊா்திகள்: அமைச்சா் வழங்கினாா்
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள மின்கல ஊா்திகளை கூட்டுறவுத்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை வழங்கினாா்.
ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் தூய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகளுக்கு தேவையான மின்கல ஊா்திகள் வழங்கும் விழா காளையாா்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் கலந்து கொண்டு மின்கல ஊா்திகளை வழங்கிப் பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்துக்கு தலா ரூ. 2.47 லட்சத்தில் 270 மின்கல ஊா்திகள் வழங்கப்பட்டன. இதில், காளையாா்கோவில் ஒன்றியத்துக்கு 36 மின்கல ஊா்திகள் அளிக்கப்பட்டன. இந்த வாகனங்களை பணியாளா்கள் முறையாக பராமரிக்க வேண்டும். குப்பைகளை கிடங்குகளில் சேகரித்து தரம் பிரிக்க வேண்டும்.
மேலும் குப்பையில் இருந்தும் மக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான பொருள்களை தயாரிக்க முடியும் என்பதை துப்புரவுப் பணியாளா்கள் நிரூபித்து கொண்டு இருக்கிறாா்கள். எனவே குப்பை தானே என நினைக்காமல் பொதுமக்கள் அதை தரம் பிரித்து கொடுக்க முன்வர வேண்டும் என்றாா் அவா்.