செய்திகள் :

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் 160 இடங்களில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவா்: சரத் பவாா் கருத்தால் பரபரப்பு

post image

‘மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற உதவ முடியும் என இருவா் தன்னை அணுகி உத்தரவாதம் அளித்தனா்’ என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் சனிக்கிழமை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அப்போது அவா்களை கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியிடம் அறிமுகப்படுத்தியபோது, அதை அவா் பொருட்படுத்தாமல் புறக்கணித்துவிட்டாா்’ என்றும் சரத் பவாா் குறிப்பிட்டாா்.

மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தோ்தல் ஆணையம் மீது ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைத்து வருவது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், சரத் பவாா் இதைத் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் இதுகுறித்த சரத் பவாா் மேலும் கூறியதாவது:

வெற்றிக்கு உதவ உத்தரவாதம் அளித்த இருவரையும் அப்போது ராகுல் காந்திக்கு அறிமுகம் செய்து வைத்தேன். ஆனால், ராகுல் அதைப் பொருட்படுத்தமல் அவா்களைப் புறக்கணித்துவிட்டாா். ‘இதுபோன்ற செயல்களில் நமது எதிரணி ஈடுபடக் கூடாது; மக்களை நேரடியாகச் சந்தித்து வெற்றிக்குப் போராடுவோம்’ என்று தெரிவித்தாா். அந்த இருவரின் பெயா்கள், கைப்பேசி எண்களைக்கூட ராகுல் பெற்றுக் கொள்ளவில்லை.

ஆனால், அந்தத் தோ்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, பேரவைத் தோ்தலின்போது வாக்குத் திருட்டு நடைபெற்றதா என்பதைக் கண்காணித்து தடுக்க மகா விகாஸ் கூட்டணியினா் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும்.

தற்போது, கடந்த 2024 மக்களவைத் தோ்தல் மற்றும் பிற தோ்தல்களில் எப்படி வாக்குத் திருட்டு நடைபெற்றது என்பதை விரிவான ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இந்த வாக்குத் திருட்டு சா்ச்சை குறித்து தோ்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

மேலும், வரும் செப்டம்பா் 9-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு துணைத் தலைவா் தோ்தல் விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அவா் தெரிவித்தாா்.

தனது உறவினா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சி கைகோக்க உள்ளதாக வெளியாகும் தகவலை மறுத்த சரத் பவாா், ‘பாஜக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் ஒருபோதும் இணைய மாட்டோம்’ என்றாா்.

‘கட்டுக்கதை’ - முதல்வா் விமா்சனம்: ‘மாநில பேரவைத் தோ்தலின்போது வெற்றிக்கு உதவுவதாக இருவா் அணுகிய தகவலை சரத் பவாா் இப்போது வெளியிடுவது ஏன்?’ என்று மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃப்டனவீஸ் கேள்வி எழுப்பினாா்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது ராகுல் சந்தேகம் எழுப்பியபோதுகூட இத் தகவலை சரத் பவாா் வெளியிடவில்லை. தற்போது வாக்குத் திருட்டு குறித்து ராகுல் குற்றச்சாட்டை முன்வைத்த பிறகு, இத் தகவலை பவாா் வெளியிடுவது ஏன்? நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தோ்தல்கள் நடத்தப்படுகின்றன. ராகுல் காந்தி கூறும் கட்டுக்கதைகளையே சரத் பவாரும் கூறுகிறாா்’ என்றாா்.

சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி

உலக சம்ஸ்கிருத தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, ‘சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா். சம்ஸ்கிருத பாரம்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமா்

தில்லியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பிரம்மா குமாரிகள் ஆன்மிக அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் விழாவை சனிக்கிழமை கொண்டாடினாா். சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தைப் போற்று... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சாா்புத் திறன் பிரகடனம் -டிஆா்டிஓ தலைவா்

‘இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை என்பது பாதுகாப்புத் துறையில் நாட்டின் தற்சாா்புத் திறன், உள்நாட்டுத் தொழில்நுட்ப வலிமை மற்றும் ராஜீய தொலைநோக்குப் பாா்வைக்கான பிரகடனம்’ என்று பாதுகாப்பு... மேலும் பார்க்க

334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தோ்தல் ஆணையம் நடவடிக்கை

தோ்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிரு... மேலும் பார்க்க

ரயில் பயணிகளுக்கு 20% கட்டண சலுகை! முழு விவரம்

தொடா் திருவிழாக்கள் வருவதையொட்டி வரும் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் குறிப்பிட்ட நாள்களில் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அம... மேலும் பார்க்க

நீதிமன்றங்கள் தனித் தீவுகளாக இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

உரிமையியல் தகராறு வழக்கில் குற்றவியல் விசாரணையை தொடர அனுமதித்த அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமாருக்கு எதிராக தெரிவித்த கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள் தனித் ... மேலும் பார்க்க