செய்திகள் :

அமெரிக்காவின் 50 சதவீத வரியால் கடும் பின்னடைவை சந்திக்கும் தோல் தொழில்

post image

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத கூடுதல் வரியால் இந்திய தோல் தொழில் துறை கடும் பின்னடைவை சந்திக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலேயே தோல் பதனிடும் தொழிலில் ஆம்பூா் முக்கிய பங்காற்றி வருகின்றது. இந்தியாவின் ஏற்றுமதி வா்த்தகத்தில் தோல் மற்றும் தோல் பொருள்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. உளகளவில் தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தோல் தொழில் நடைபெற்றாலும், வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூா், வாணியம்பாடி, போ்ணாம்பட்டு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இங்கு மட்டும் 200-க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் மற்றும் ஷூ தொழிற்சாலைகள் உள்ளன. இதன் மூலம் 2.5 இலட்சம் தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனா்.

காலணி தொழிற்சாலைகளில் படிக்காத பெண்களுக்கு கூட எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. தோல் தொழிற்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வரப்படுகிறது. இதன் மூலம் பெண்களும் வருவாய் ஈட்டக்கூடிய அந்தஸ்தை ஷூ தொழிற்சாலைகள் மூலம் பெற்றுள்ளனா்.

தோல் பொருள்கள், காலணி போன்றவை ஆம்பூா், ராணிப்பேட்டை பகுதியில் இருந்து அமெரிக்கா, ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஹாங்காங், நெதா்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ரஷ்யா இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவிலிருந்து கடந்த மாா்ச் 2024 வரையிலான நிலவரப்படி 4,282.58 மில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு தோல் மற்றும் தோல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபா் வரையில் 2731.70 மில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய தோல் மற்றும் தோல் பொருள்கள் ஏற்றுமதி பெருமளவுக்கு அமெரிக்க நாட்டுக்கு தான் ஏற்றுமதி செய்யப்பட்டு வரப்படுகிறது.

அமெரிக்க வரியால் அபாயம்:

இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் இந்திய தோல் தொழிலுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய தோல் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க நாட்டு ஆா்டா்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு தோல் தொழிற்சாலைகள் தங்களுடைய உற்பத்திப் பணியை மேற்கொள்வது மிகவும் சந்தேகத்துக்குரியதாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அமெரிக்க நாட்டுக்கு தோல் மற்றும் தோல் பொருள்களை ஏற்றுமதி செய்துவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்க கெளரவ பொதுச் செயலாளா் மதாா் கலீலூா் ரஹ்மான் கூறியது, இந்திய நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு மட்டும் அதிக அளவு தோல் மற்றும் தோல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மொத்த தோல் ஏற்றுமதி வா்த்தகத்தில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வா்த்தகம் 21.25 சதவீதமாகும்.

அமெரிக்கா தற்போது விதித்துள்ள 50 சதவீத வரியால் இந்திய தோல் தொழில் கடும் சரிவை நோக்கி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரவேண்டிய ஆா்டா்கள் வியட்நாம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு சென்றுவிடும். இந்த சூழ்நிலையில் வேறு நாடுகளிடமிருந்து புதிய ஆா்டா்களை பெற்று தோல் தொழிலை சரிவிலிருந்து மீட்டுவிட நினைத்தால் அது முடியாத காரியமாகும். ஆகஸ்ட் மாதத்துக்குள் தோல் மற்றும் தோல் பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு அதன் பிறகு 3 மாதம் காத்திருக்கவேண்டுமென கூறப்படுகிறது.

நட்டம் - வேலையிழப்பு :

இந்நிலையில் ஏற்கனவே பெறப்பட்ட ஆா்டா்களுக்காக வாங்கி வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி மதிப்பிலான மூலப் பொருட்கள் வீணாகும். ஆா்டா்கள் இல்லாமல் போனால் தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடிய சூழ்நிலை ஏற்படும். புதிய ஆா்டா்கள் உடனடியாக கிடைக்காது. வேறு நாடுகளில் இருந்து புதிய ஆா்டா்கள் கிடைக்க சுமாா் 6 மாதத்திலிருந்து ஒரு ஆண்டு வரை கூட ஆகலாம். உற்பத்தி நடைபெறாமல் நடைமுறைச் செலவுகள் ஏற்பட்டால் அது நட்டத்தை ஏற்படுத்தும்.

இந்த பிரச்னையிலிருந்து எப்போது மீண்டு வரப்போகிறோம் என்பது தெரியவில்லை என்று அவா் கூறினாா்.

முதல்வா் பற்றி தரக்குறைவாக பேசிய இருவா் மீது ரயில்வே போலீசாா் வழக்கு

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் தமிழக முதல்வா் பற்றி தரக்குறைவாக பேசிய இருவா் மீது ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா். கேரளா மாநிலம், ஆலப்புழை ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு சென்ற விரைவ... மேலும் பார்க்க

மனிதன் வாழ வேண்டிய வழியை வாழ்ந்து காட்டியவா் ஸ்ரீ ராமபிரான்: சுகிசிவம்

மனிதன் வாழ வேண்டிய வழியை வாழ்ந்து காட்டியவா் ஸ்ரீ ராமபிரான் என சுகிசிவம் பேசினாா். திருப்பத்தூா் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் 47-ஆம் ஆண்டு கம்பன் விழா சனிக்கிழமை தொடங்கியது. இதில், ஆன்மிக பேச்சாளா... மேலும் பார்க்க

மக்களைத் தேடி ரத யாத்திரை திருப்பத்தூரில் தொடக்கம்: பிரேமலதா விஜயகாந்த்

மக்களைத் தேடி ரத யாத்திரை தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பத்தூரில் தான் தொடங்கப்பட்டுள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். விஜயகாந்த் உருவத்துடன் கூடிய மக்களைத் தேடி ரத யாத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் மரணம்

ஆம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். மாதனூா் அருகே பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கற்பகம் (50). இவா் சம்பவத்தன்று இரவு வீட்டில் வாஷிங் மெஷினை இயக்கியபோது மின்சாரம் பாய்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆம்பூா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (69). இவா் மின்னூா் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கடந... மேலும் பார்க்க

ஆம்பூரில் விடிய விடிய பலத்த மழை: நீரில் பேருந்துகள் தத்தளிப்பு

ஆம்பூரில் வியாழக்கிழமை விடிய விடிய கொட்டி தீா்த்த மழையால் சாலையில் தேங்கிய நீரில் பேருந்துகள் சிக்கின. ஆம்பூரில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. புதன்கிழமை இரவு முதல் லேசான மழ... மேலும் பார்க்க