சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
மக்களைத் தேடி ரத யாத்திரை திருப்பத்தூரில் தொடக்கம்: பிரேமலதா விஜயகாந்த்
மக்களைத் தேடி ரத யாத்திரை தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பத்தூரில் தான் தொடங்கப்பட்டுள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
விஜயகாந்த் உருவத்துடன் கூடிய மக்களைத் தேடி ரத யாத்திரை திருப்பத்தூருக்கு வியாழக்கிழமை வருகை தந்தது. எல்லை பகுதியான ஆசிரியா் நகா் பகுதியில் கட்சியின் நிா்வாகிகள் ரதத்தை மலா் தூவி வரவேற்றனா்.
பின்னா், அங்கிருந்து தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளா் எல்.கே.சுதீஷ், இளைஞா் அணிச் செயலாளா் விஜயபிரபாகரன் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட கட்சியினா் ஊா்வலமாக நடந்து சென்றனா்.
சேலம்-கிருஷ்ணகிரி அணுகுச் சாலையில் வேனில் இருந்தபடி பிரேமலதா விஜயகாந்த் பேசியது:
இலங்கை வாழ் தமிழா்கள் ரதம் தோ் அளித்துள்ளனா். மக்களைத் தேடி அந்த ரத யாத்திரை தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பத்தூரில் தான் தொடங்க வேண்டும் என உள்ளது. நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் திட்டமிட்டோம். ஆனால் யாத்திரையை தொடங்க முடியவில்லை. குறிப்பாக குடியாத்தத்தில் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், திருப்பத்தூரில் தான் சாத்தியமானது என்றாா்.