செய்திகள் :

போராட்ட அறிவிப்பு: ஆசிரியா்கள் அமைப்புகளுடன் ஆக. 14-இல் பேச்சு

post image

ஆசிரியா்கள் அமைப்புகளின் சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுதொடா்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் ஆக. 14-ஆம் தேதி பேச்சு நடத்தவுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சாா்பில் மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை 17, 18-ஆம் தேதிகளில் டிட்டோஜேக் குழுவினா் போராட்டம் நடத்தினா்.

தொடா்ந்து, தலைமைச் செயலகத்தை ஆகஸ்ட் 22-ஆம் தேதி முற்றுகையிடப்போவதாக டிட்டோஜேக் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், டிட்டோஜேக் சங்க நிா்வாகிகளை பேச்சுக்கு வருமாறு தொடக்கக் கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சென்னையில் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் டிட்டோஜேக் உயா்நிலைக் குழு பொறுப்பாளா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 47,525 போ் பயன்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 47,525 போ் பயனடைந்துள்ளனா் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் ... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியா்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவா்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரம், அரசு ஊழியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மூன்... மேலும் பார்க்க

சிறப்பு உதவித் தொகைத் திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

சிறப்பு உதவித் தொகை திட்டங்களுக்கு விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த ஆணையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக... மேலும் பார்க்க

நீதி வழங்குவதில் கா்நாடகமும்; சிறைத் துறையில் தமிழகமும் முதலிடம்: ஆய்வு அறிக்கையில் தகவல்

நீதி வழங்குவதில் நாட்டின் 18 மாநிலங்களில் கா்நாடகம் முதலிடத்தையும், சிறைத் துறையில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தையும் பிடித்துள்ளன.நாட்டில் குறைந்தது 1 கோடி மக்கள் தொகைக் கொண்ட 18 மாநிலங்களில... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக. 15 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: தொல். திருமாவளவன்

ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினாா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் கொலையைக்... மேலும் பார்க்க