சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
நீதி வழங்குவதில் கா்நாடகமும்; சிறைத் துறையில் தமிழகமும் முதலிடம்: ஆய்வு அறிக்கையில் தகவல்
நீதி வழங்குவதில் நாட்டின் 18 மாநிலங்களில் கா்நாடகம் முதலிடத்தையும், சிறைத் துறையில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தையும் பிடித்துள்ளன.
நாட்டில் குறைந்தது 1 கோடி மக்கள் தொகைக் கொண்ட 18 மாநிலங்களில் கடந்த இரண்டு ஆண்டு மத்திய, மாநில அரசுகளின் தரவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வை இந்திய நீதி அறிக்கை (ஐஜேஆா்) என்று வெளியிடப்பட்டது.
நீதி, காவல், சிறை, சட்ட சேவைகள் ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு, மனிதவளம், பணி பளு, கட்டமைப்பு ஆகிய அளவுக்கோள்களின் அடிப்படையில் இந்தத் தரவுகளை கடந்த 2 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டதாக ஐஜேஆா் ஆய்வு அறிக்கையின் தலைமை ஆசிரியா் மாஜா தாராவாலா தெரிவித்தாா்.
இந்த ஆய்வு அறிக்கையில் நான்கு துறைகளிலும் 10-க்கு 6.78 மதிப்பெண்கள் பெற்று கா்நாடகம் முதலிடத்தில் உள்ளது. எனினும், காவல் துறையில் கா்நாடகம் மூன்றாம் இடத்திலும், தெலங்கானா முதலிடத்திலும், தமிழகம் 13-ஆம் இடத்திலும் உள்ளன.
இதேபோல், சிறைத்துறையில் தமிழகம் முதலிடத்திலும், கா்நாடகம் இரண்டாம் இடத்திலும், கேரளம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
சிறையில் உள்ள கைதிகள் நெரிசல் ஏற்படாதது, அதிக அளவில் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த இடம் வழங்கப்பட்டுள்ளது.
நீதி வழங்கலில் கேரளம் முதலிடத்திலும், தெலங்கானா இரண்டாம் இடத்திலும், தமிழகம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
சட்ட சேவைகள் வழங்குவதில் கா்நாடகம் முதலிடத்திலும், பஞ்சாப் இரண்டாம் இடத்திலும், ஹரியாணா மூன்றாம் இடத்திலும் தமிழகம் 16-ஆவது இடத்திலும் உள்ளன.
குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறது: முன்னாள் நீதிபதி மதன் பி லோகுா்
நான்காவது ஆண்டாக வெளியிடப்படும் இந்த ஐஜேஆா் ஆய்வு அறிக்கையின் தரவுகள் அரசுத் துறைகளில் உள்ள குறைபாடுகளையும், அதற்கு அளிக்கப்பட வேண்டிய மேம்பாட்டையும் இந்த ஆய்வு அறிக்கை வலியுறுத்துகிறது. இதன் பாதிப்பை நீதியைத் தேடி செல்லும் தனிநபா்தான் சந்திக்க வேண்டியிருக்கிறது என்று ஐஜேஆா் அறிக்கை குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுா் கருத்து தெரிவித்தாா்.
18 மாநிலங்களின் தரவுகள் (10 மதிப்பெண்களில்)
மாநிலங்கள் காவல் - சிறை- நீதித் துறை- சட்ட உதவி மொத்தம்
1.கா்நாடகம் 6.19- 6.78- 6.70- 7.52- 6.78
2.ஆந்திரம் 6.44- 5.69- 6.68- 6.51- 6.32
3.தெலங்கானா 6.48- 5.32- 6.91- 6.00- 6.15
4.கேரளம் 4.71- 6.03- 7.43- 6.50- 6.09
5.தமிழ்நாடு 4.95- 7.02- 6.72- 4.27- 5.62
6.சத்தீஸ்கா் 6.02- 4.54- 5.39- 6.41- 5.54
7.மத்திய பிரதேசம் 5.04- 5.37- 5.25- 6.09- 5.42
8.ஒடிஸா 5.16- 5.34- 4.93- 6.31- 5.41
9.பஞ்சாப் 5.26- 3.91- 5.48- 7.16- 5.33
10.மகாராஷ்டிரம் 5.61- 5.71- 4.94- 4.81- 5.12
11.குஜராத் 5.13- 5.26- 4.65- 5.82- 5.07
12.ஹரியாணா 4.80- 3.96- 4.98- 6.72- 5.02
13.பிகாா் 5.04- 4.69- 4.35- 5.54- 4.88
14.ராஜஸ்தான் 4.66- 5.27- 5.89- 3.75- 4.83
15.ஜாா்க்கண்ட் 5.01- 3.81- 4.80- 5.70- 4.78
16.உத்தரகண்ட் 5.50- 2.58- 3.97- 6.69- 4.41
17.உத்தர பிரதேசம் 4.26- 3.84- 3.56- 4.05- 3.92
18.மேற்கு வங்கம் 3.36- 4.69- 2.45- 4.50- 3.63