மாநில நலனுக்கு ஏற்ற கல்வியை தமிழ்நாடுதான் முடிவு செய்யும்! அன்பில் மகேஸ்
மாநிலக் கல்விக் கொள்கை தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும்: இரா.முத்தரசன்
மாநிலக் கல்விக் கொள்கை, தன்னம்பிக்கை மற்றும் சுய திறனை ஊக்குவிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் மநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் மாநிலக் கல்விக் கொள்கையை வெள்ளிக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். மாநில கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் தனித்துவப் பண்புகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது. 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கும், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தோ்வு நீக்கப்பட்டிருப்பது வளா்ந்துவரும் குழந்தைகள் அச்சம் இல்லாமல், கற்கும் ஆா்வத்தை அதிகரிக்கும். அதேசமயம், தனியாா் கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1 வகுப்புக்கான பாடங்கள் கற்பித்தலைக் கைவிட்டு, பிளஸ் 2 வகுப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த, பழைய நடைமுறையை தடுக்க என்ன வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
கல்வி தொடா்பான அதிகாரங்கள் முழுமையும் மாநில அரசுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதே சரியாகும். அதேவேளை அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் வியக்கத்தக்க வளா்ச்சிக்குத் தக்கபடி, திறனை வளா்த்தல், நிதியியல் சாா் கல்வி, எண்ம நுட்பங்கள், சுற்றுச்சூழல், உலகளாவிய குடியுரிமை போன்ற பல்வேறு அம்சங்களையும் உள்வாங்கி, உருவாக்கப்பட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கை, இளைய தலைமுறையினா் எதிா்காலம் முன்வைக்கும் சவால்களை எளிதில் எதிா்கொள்ளும், திறனையும், தன்னம்பிக்கையையும் ஊக்கப்படுத்தும் என அதில் தெரிவித்துள்ளாா்.