சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
8-ஆம் வகுப்பு தோ்வு: நாளை முதல் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு பெறலாம்
எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது.
இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கான பொதுத்தோ்வு ஆக.18 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை தோ்வா்கள் திங்கள்கிழமை (ஆக.11) பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்தவொரு தோ்வரும் தோ்வெழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள்.
இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த தனித்தோ்வா்களுக்கு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.