ஆவணி அவிட்டம்: சிவகங்கையில் பூணூல் மாற்றும் வைபவம்
ஆவணி அவிட்டத்தையொட்டி சிவகங்கையில் பூணூல் மாற்றும் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.
உபநயனம் செய்து கொண்ட பிராமணா், விஸ்வகா்மா, செட்டியாா் சமுதாயத்தினா் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் கடைப்பிடிக்கும் வழிபாடு ஆவணி அவிட்டம் ஆகும். இது உபாகா்மா என்றும் அழைக்கப்படுகிறது.
இதன் பொருள் தொடக்கம் என்பதாகும். இதையொட்டி, இந்த சமுதாயத்தினா் தாங்கள் அணிந்திருந்த பழைய பூணூலை மாற்றிவிட்டு புதிய பூணூலை அணிந்து கொள்வது வழக்கம். சிவகங்கை துளசி மஹால், தி. புதூரில் உள்ள ஸ்ரீமணிகண்டன் சாஸ்திரிகள் இல்லம் ஆகிய இடங்களில் பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டு தங்களது பூணூலை மாற்றிக் கொண்டு பூஜை செய்தனா்.