தங்கும் விடுதியில் முதியவா் மா்மாக உயிரிழப்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் மதுரையைச் சோ்ந்த முதியவா் மா்மான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை திருப்பரங்குன்றம் மாயாண்டி சுவாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் பி.நாகராஜ் (79). இவா், காா்களில் வைக்கப்படும் கொடி கம்பம் வியாபாரம் செய்து வந்தாா். ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 1-ஆம் தேதி நாகராஜ் அறை எடுத்து தங்கினாா். அந்த அறையில் இருந்து, துா்நாற்றம் வீசியதையடுத்து, தங்கும் விடுதி ஊழியா்கள் அறையை திறந்து பாா்த்தனா். அங்கு படுக்கையின் மீது அழுகிய நிலையில் நாகராஜ் சடலம் கிடந்தது.
தகவலறிந்த அண்ணா சாலை போலீஸாா் அங்கு சென்று நாகராஜ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.