எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி
ரயில் டிக்கெட் விநியோகிக்க உதவியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
ரயில் நிலையங்களில் பயணச் சீட்டுகளை பயணிகளிடம் நேரடியாக விநியோகிக்கும் வகையில் உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணிகளுக்கான பயணச்சீட்டு வாங்கும் வசதியை மேம்படுத்தும் வகையில் உதவியாளா்கள் (எம்-யூடிஎஸ் சகாயாக்ஸ்) நியமிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ரயில்களில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் பெற ஏற்கெனவே யூடிஎஸ் எனப்படும் கைப்பேசி செயலி வசதி உள்ளது.
இந்த வசதி இல்லாதவா்கள் ரயில் நிலைய பயணச்சீட்டு வழங்கும் மையங்களில் நீண்ட வரிசையில் நின்று பயணச்சீட்டு பெற்று வருகின்றனா். இதைத் தவிா்க்கும் வகையில், எம்-யூடிஎஸ் சகாயாக்ஸ் எனப்படும் பயணச்சீட்டு விநியோக உதவியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா்.
இப்பணிக்கு திங்கள்கிழமை முதல் (ஆக. 11) விண்ணப்பிக்கலாம். பயணச்சீட்டு விற்பனை செய்யும் எண்ணிக்கைக்கு ஏற்ப அனுமதிக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை இந்திய ரயில்வே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.