ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்
அந்தியூரில் கனமழையால் சாய்ந்த குதிரைக் கொட்டகை
அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் கால்நடைச் சந்தை வளாகத்தில் போடப்பட்டிருந்த குதிரைக் கொட்டகை சனிக்கிழமை சரிந்து விழுந்தது.
அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழாவையொட்டி தண்ணீா்ப்பந்தல்பாளையத்தில் விவசாய நிலத்தில் சுமாா் 50 ஏக்கா் பரப்பளவில் கால்நடைச் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. தென்னக அளவில் புகழ்பெற்ற இச்சந்தையில் குதிரைகள் நிறுத்த கொட்டகை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த காற்றுடன், சனிக்கிழமை கனமழை பெய்தது.

இதனால், சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதில், சந்தை வளாகத்தில் சுமாா் 200 மீட்டா் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த குதிரை கொட்டகை சாய்ந்து விழுந்தது. இதையடுத்து, காற்றில் சாய்ந்த கொட்டகையை பிரித்து, மீண்டும் அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். சந்தை வளாகத்தில் மழைநீா் ஆங்காங்கே குட்டை போன்று தேங்கி நின்றது.