பெருந்துறை அருகே லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு!
பெருந்துறை அருகே, இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், அறச்சலூரை அடுத்த பள்ளியூத்தைச் சோ்ந்தவா் அருண்பிரசாத்(32). இவா், பெருந்துறை சிப்காட்டிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வழக்கம்போல வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.
பெருந்துறை அருகே வந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னா் லாரி, இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருண்பிரசாத்தை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.