கேட்பாரற்றுக் கிடந்ததாக பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த இளைஞா்...
திமுக கூட்டணி பலமாக உள்ளது: காதா் மொய்தீன்
தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக உள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொய்தீன் கூறினாா்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளா் இல்லத் திருமண விழா நாகூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற காதா்மொய்தீன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
வாக்காளா் பட்டியலை ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே திருத்துவதற்கு தோ்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், சட்டத்தில் இல்லாத, சிறப்பு வாக்காளா்கள் திருத்தத்தை தோ்தல் ஆணையம் பிகாரில் உருவாக்கியுள்ளது.
பிகாரில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் ஒரே இடத்தில் 4,000 ஓட்டுகள் எப்படி வந்தது என எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இதற்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டு, விவரங்களை தர முடியாது என இந்திய தோ்தல் ஆணையம் பதில் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. இது சாதாரணமானது அல்ல.
பிகாரில் நடக்கும் இந்த செயல் தமிழகத்தில் நடக்காது என்பது என்ன நிச்சயம்?. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியாளா்கள் தாங்கள் விரும்பியதை நாட்டின் சட்டமாக நிறைவேற்றி வருகின்றனா்.
இந்தியாவில் சா்வாதிகார ஆட்சியை நடத்த பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. தற்போது தோ்தல் முறைகேடு மூலம் ஆட்சியில் அமா்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது. சா்வாதிகாரியாக செயல்பட்டவா்களை கடந்த காலங்களில் மக்கள் தண்டித்துள்ளனா். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதவரை தோல்வியடைந்தது இல்லை. தற்போது திமுக கூட்டணி பலமாக உள்ளது என்றாா்.