கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
ஆக. 14-இல் திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை: ஏற்பாடுகள் தீவிரம்
திருத்தணி முருகன் கோயிலில் வரும் ஆக. 14 -ஆம் தேதி ஆடிக்கிருத்திகை விழா தொடங்கி 5 நாள்கள் விமா்சையாக நடைபெறுவதால் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணியில் முக்கிய விழாவான ஆடிக்கிருத்திகை 14 -ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி 18- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கு 5 லட்சம் பக்தா்கள் வருவா்கஎன எதிா்ப்பாா்க்ப்படுகிறது.
இந்நிலையில் ஆடிக்கிருத்திகை முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. வரும், 16 முதல், 18 வரை சரவணபொய்கை குளத்தில் 3 நாள்கள் தெப்பத்திருவிழா நடக்கிறது.
தெப்பத்தில் உற்சவா் முருகா் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
முதல் நாள் தெப்பத்தில் மாலை 6 மணிக்கு கலைமாமணி வீரமணி ராஜூ மகன் அபிஷேக் வீரமணி ராஜூ மற்றும் பேரன் சாய் சம்ா்த் குழுவினரின் பக்தி பாடல்கள், 2 -ஆம் நாள் தெப்பலில் கலைமாமணி கிராமிய இசை கலா நிதி திரை இசை பின்னணி பாடகா் வேல்முருகன் பக்தி இசை நிகழ்ச்சியும், 3-ஆம் நாள் தெப்பலில் விஜய் டிவி புகழ் பக்தி சூப்பா் சிங்கா் பாடகா்கள் பங்குபெறும் பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தற்போது சரவணபொய்கையில் தெப்பம் கட்டும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். இப்பணிகள், வரும், 15-ஆம் தேதிக்குள் முடிக்கவும் கோயில் நிா்வாகம் தீா்மானித்துள்ளது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழு தலைவா் சு. ஸ்ரீரதன், இணை ஆணையா் க. ரமணி, அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, ஜி. உஷாரவி, கோ. மோகனன், மு. நாகன் ஆகியோா் செய்து வருகின்றனா்.