தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில் ஆடி விழா திருவிளக்கு பூஜை
திருவள்ளூா் அடுத்த ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயில் ஆடி திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜையில் பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திருவள்ளூா் அடுத்த காக்களூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள இக்கோயிலில் இரண்டாம் ஆண்டு ஆடித்திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு விநாயகா் மற்றும் அம்மனுக்கு அபிஷேகமும், 10 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
அதையடுத்து அம்மனுக்கு சந்தன காப்பும், உற்சவா் உள் புறப்பாடு நிகழ்வும், இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் பூஜையில் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
இவ்விழாவில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.