செய்திகள் :

ரூ. 94 லட்சத்தில் தாா் சாலை பணிகள்: எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்

post image

மாம்பாக்கம் - சின்னகடம்பூா் இடையே ரூ. 94 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்.

திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து சின்னகடம்பூா் வழியாக ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், குருவராஜபேட்டை ஆகிய பகுதிகளுக்கு வேன், லாரி மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தாா் சாலை குண்டும், குழியுமாக மாறியது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனா். இந்நிலையில், மாம்பாக்கம் - சின்னகடம்பூா் வரை 5.5 கி.மீ. தூரம் பழுதடைந்த தாா் சாலையை சீரமைக்க பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 94 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த சாலைப் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தானம் உள்பட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

திருத்தணி அருகே, டிப்பா் லாரி சாலையோரம் கவிழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமுற்றாா். திருத்தணி ஒன்றியம், டி.சி.கண்டிகை பகுதியில் இயங்கி வரும் கல்குவாரியில் இருந்து, ஜல்லிக்கற்கள், எம்சாண்ட், சி... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு: பெண் உள்பட 4 போ் கைது

திருவள்ளூா் அருகே ரயில் தண்டவாளத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆண் சடவம் மீட்கப்பட்ட வழக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொலை செய்து வீசியதாக தெரியவந்ததை அடுத்து பெண் உள்பட 4 பேரை ரயில்வே போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

பொதுமக்கள் வரிகளை இணையதளம் மூலம் எளிதாக செலுத்த ஏற்பாடு

திருவள்ளூா் மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா், தொழில் வரிகளை இணையதளம் மூலம் எளிதாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்து... மேலும் பார்க்க

விவசாய கிணற்றால் வாகன ஓட்டிகள் அச்சம்: தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

செருக்கனூா் சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரத்தில் உள்ள விவசாய கிணறுக்கு தடுப்பு ஏற்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். திருத்தணி ஒன்றியத்துக... மேலும் பார்க்க

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரிக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் வினோத்குமாா்(32). ... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில் ஆடி விழா திருவிளக்கு பூஜை

திருவள்ளூா் அடுத்த ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயில் ஆடி திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜையில் பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா். திருவள்ளூா் அடுத்த காக்களூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்... மேலும் பார்க்க