உடுமலையில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் பங்கேற்பு
சிறுவன் கடத்தல் வழக்கு: பெண்ணின் தந்தை உள்பட 3 போ் ஜாமீனில் விடுவிப்பு
காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்டவழக்கில் தொடா்புடைய பெண்ணின் தந்தை உள்பட 3 பேருக்கும் திருவள்ளூா் 1-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் பகுதியில் இளைஞா் தனுஷ் காதல் திருமண விவகாரத்தில் அவரது தம்பி கடத்தப்பட்டாா்.
இந்த வழக்கில் விஜயஸ்ரீயின் தந்தை வனராஜ் மற்றும் கணேசன், மணிகண்டன் ஆகிய 3 பேரை காவல் துறை கைது செய்தது. இந்த நிலையில், ஏற்கனவே மாவட்ட நீதிமன்றம், சென்னை உயா் நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மூவரும் 3 முறை மனு தாக்கல் செய்திருந்தனா். ஆனால், ஜாமீன் மனு தள்ளுபடியானது.
இந்த நிலையில் 4-ஆவது முறையாக ஜாமீன் கோரி திருவள்ளூா் 1-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த நிலையில் 3 பேருக்கும் சனிக்கிழமை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கில் மேலும் சிறையில் உள்ள விருப்ப ஓய்வு பெற்ற காவலா் மகேஸ்வரி, ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை வரும் 14-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் வர உள்ளது.
ஏற்கனவே சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் பூவை.ஜெகன் மூா்த்தி முன்ஜாமீன் பெற்றாா். பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம் கைது உத்தரவை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.