தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
கள்ளத்தனமாக மது விற்றவா் கைது
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கள்ளத்தனமாக மது விற்ற இளைஞா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையம் காவல்துறையினா் சனிக்கிழமை இரவு இடையாா் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது, உடையாா்பாளையம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சங்கிலிமுத்து மகன் மணிவண்ணன்(30) என்பவா் அரசு மதுவை கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவரை கைது செய்து, 617 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.