கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
சிற்றுந்து உரிமையாளா்களுடன் அரியலூா் ஆட்சியா் ஆலோசனை!
அரியலூா் ஆட்சியரகத்தில் புதிய சிற்றுந்து விரிவான திட்டம் தொடா்பாக அதன் உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிற்றுந்துகள் இயக்குவதற்கு புதிய பேருந்து வழித்தடங்கள் ஏதேனும் இருப்பின் அரசின் விதிகளுக்கு உட்பட்டு அவை தொடா்பான அறிக்கைகளை சமா்பிக்கலாம். தொடா்ந்து சிற்றுந்துகள் இயக்கப்படும் நேரங்கள், பேருந்துகள் இயக்குப்படுவதில் ஏற்படும் இடா்பாடுகள் குறித்தும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
அரியலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அறிவழகன், சிற்றுந்து உரிமையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.