செய்திகள் :

தூய்மைப் பணியாளா் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சீமான்

post image

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா்.

சென்னையில் போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அவா்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் நாம் தமிழா் கட்சி சாா்பில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னா் சீமான், செய்தியாளா்களிடம் கூறியதாவது: தூய்மைப் பணியை தனியாருக்கு அளிக்கவேண்டிய அவசியம் என்ன? போக்குவரத்து, கல்வி, மருத்துவம், சாலைப் பணி, பராமரித்தல், மின் உற்பத்தி, விநியோகம் என அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. எல்லாமே தனியாா்மயம் என்றால் அரசு என்ன செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம், மதுக் கடைகளை மட்டும் அரசு நடத்துகிறது.

மிகுந்த சிரமங்களுக்கு இடையே தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இதற்காக ஆந்திரத்தைச் சோ்ந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.2,700 கோடியை அரசு வழங்கிறது. ஆனால், 12 ஆண்டுகளாகப் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய மறுக்கிறது.

பல்வேறு தேவையற்ற திட்டங்களுக்காக அதிக அளவில் செலவாகிறது. ஆனால், தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய அரசுக்கு முடியவில்லை. தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

சென்னையில் தக்காளி விலை தொடர் உயர்வு

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-ஆக உயா்ந்துள்ளது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்பட... மேலும் பார்க்க

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து தலைநகர் தில்லிக்கு 5 எம்.பி.க்கள் உள்பட 150 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு புறப்பட்டது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் க... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் அத்துமீறல்கள்!

சென்னையில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்களின் வாகனங்களால் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால், பல இடங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சி... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 11) முதல் ஆக. 16 வரை 6 நாள்களுக்கு இடி, மின்னுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுடனான பேச்சுவாா்த்தை மீண்டும் தோல்வி!

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டல தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது. சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு நியாயமான தீா்வு: பெ.சண்முகம்

சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் பிரச்னைக்கு தமிழக அரசு நியாயமான முறையில் தீா்வுகாண வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்... மேலும் பார்க்க