சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
அரியலூரில் சட்டவிரோதமாக மது விற்றதாக 267 வழக்குகள் பதிவு
அரியலூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக 267 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை மாவட்ட காவல் துறை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினா், நிகழாண்டு 2025 தொடக்கம் முதல் அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்துக்காக 267 வழக்குகள் பதியப்பட்டு, 7,962 பாட்டில்கள்(1432.710 லிட்டா்) மற்றும் 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கஞ்சா விற்பனை செய்த குற்றத்துக்கு 26 வழக்குகள் பதியப்பட்டு, 5.3 கிலோ கஞ்சா மற்றும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவா்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
சட்டவிரோதமாக கள் இறக்குதல் மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநில மதுபானத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்த குற்றத்திற்காக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரிடமிருந்து 30 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.