செய்திகள் :

மற்ற நாடுகளைப்போல நாமும் துன்புறுத்தக் கூடாது: நிதின் கட்கரி

post image

பொருளாதார செல்வாக்கு பெற்ற நாடுகள், மற்ற நாடுகளை துன்புறுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் நாக்பூர் மாவட்டத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (VNIT) மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மற்ற நாடுகளை துன்புறுத்தும் நாடுகளின் பொருளாதாரரீதியாக செல்வாக்கு இருப்பதாலும், சிறந்த தொழில்நுட்பங்கள் இருப்பதாலும்தான் அவர்களால் அவ்வாறு செய்ய முடிகிறது.

இந்தியா தனது ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்க வேண்டும். இந்தியா சிறந்த தொழில்நுட்பம் மற்றும் வளங்களைப் பெற்றால், யாரையும் துன்புறுத்தாது.

ஏனெனில், உலகின் நலனே முக்கியமானது என நமது கலாசாரம் கற்பிக்கிறது என்று தெரிவித்தார்.

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகித வரி விதிப்பதை சுட்டிக்காட்டி, நிதின் கட்கரி பேசியுள்ளார்.

காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் ஆனந்த் சா்மா ராஜிநாமா!

காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் பதவியில் இருந்து ஆனந்த் சா்மா ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். இப்பிரிவை மறுகட்டமைக்கவும் இளைய தலைவா்களுக்கு வழிவிடவும் இந்த முடிவை மேற்கொண்ட... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா? -பிரதமர் மோடி சொன்ன விஷயம்

பெங்களூரு: பெங்களூரில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கான அடிக்கல்லை இன்று(ஆக. 10) பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில் ஆரஞ்சு லைன் என்றழைக்கப்படும் இந்த மெட்ரோ ர... மேலும் பார்க்க

பெண்ணின் உயிரை மாய்த்த போக்குவரத்து நெரிசல்! கணவர் கண்முன்னே துடிதுடித்து பலி!

மகாராஷ்டிரத்தில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியதில், சிகிச்சைக்கு சென்று கொண்டிருந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரத்தில் பால்கர் மாவட்டத்தில் சாயா பூரவ் (49) என்ப... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு அதிக ஸ்மார்ட்போன்களை அனுப்பும் நாடு இந்தியா!

அமெரிக்காவுக்கு அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து அனுப்பும் நாடாக இந்தியா உள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் மெ... மேலும் பார்க்க

தெருநாய்களால் சோகம்! தேசியளவிலான தடகள வீரர் பலி!

ஒடிஸாவில் தெருநாய் கடித்து தேசியளவிலான மாற்றுத்திறனாளி தடகள வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸாவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதியில், போலங்கிர் பகுதியில் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 10) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் இரண்டு முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், ... மேலும் பார்க்க