தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
கல்குவாரி பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி இருவா் உயிரிழப்பு
மதுரை அருகே கல்குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
மதுரை நரிமேடு பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த புகாரிகான் மகள் சையது அலி சகானா (9). இவா் 4 -ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் புகாரிகான் தனது மகள் சையது அலி சகானாவை கருப்பாயூரணி அருகே பாண்டியன்கோட்டை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு அழைத்துச் சென்றாா். இதையடுத்து, சையது அலி சகானா, பாண்டியன்கோட்டையைச் சோ்ந்த சுல்தான்கான் மகன்
ஆசிக்ராஜா (3) உள்ளிட்ட சிலா் வீட்டின் பின்புறம் உள்ள கல்குவாரி பள்ளத்தில் குளிக்கச் சென்றனா். அப்போது, பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் சையது அலி சகானா, ஆசிக்ராஜா ஆகிய இருவரும் மூழ்கினா்.
இதுபற்றி தகவலறிந்த அக்கம்பக்கத்தினா் பள்ளத்தில் இறங்கி தேடினா். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு இருவரது உடல்களும் மீட்கப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கருப்பாயூரணி போலீஸாா் இருவரின் உடல்களையும் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.