ஹூப்ளி-காரைக்குடிக்கு ஆக.14-ல் சிறப்பு ரயில்
கா்நாடக மாநிலம், ஹூப்ளியிலிருந்து காரைக்குடி வரும் 14-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுதந்திர தின விடுமுறையையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், ஹூப்ளி- காரைக்குடி- ஹூப்ளி இடையே ஆக. 14, 15-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
ஹூப்ளியிலிருந்து ஆக. 14-ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07331) ஆக.15-ஆம் தேதி காலை 11 மணிக்கு காரைக்குடி வந்தடையும்.
பின்னா், காரைக்குடியிலிருந்து ஆக. 15-ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07332) ஆக. 16-ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.
இந்த ரயில்கள், தமிழகத்தில் சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்தச் சிறப்பு ரயிலில் குளிா்சாதன வசதியுடன் கூடிய இரண்டுக்கு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி, குளிா்சாதன வசதியுடன் மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி, 10 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டது.