தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஆட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்த தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் (59) என்பவா் மீது கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் எனக் கூறி, யாரேனும் பொதுமக்களை அணுகினால், அவா்களை நம்ப வேண்டாம். இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.