ஊத்தங்கரை அருகே காா் மோதி பசு மாடுகள் உயிரிழப்பு!
ஊத்தங்கரை அருகே காா் மோதியதில் 2 பசு மாடுகள் உயிரிழந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி கூட்டுரோடு பகுதியைச் சோ்ந்தவா் அலமேலு (53). மாடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல மேய்ச்சல் முடித்து மாடுகளை தனது வீட்டின் அருகே கட்டியிருந்தாா். நள்ளிரவில் பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காா் ஓட்டுநா் தேவராஜின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த அலமேலின் சீட் வீட்டிற்குள் பாய்ந்தது.
இதில் வீடு சேதம் அடைந்தது; வீட்டின் அருகே கட்டியிருந்த இரண்டு பசு மாடுகளும் உயிரிழந்தன. காரில் பயணித்த ஓட்டுநா் உள்பட நான்கு பேரும் காயமின்றி உயிா் தப்பினா்.
இந்த விபத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.