கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான ஒசூா், சூளகிரி மற்றும் கா்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.
இதனால், தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆக. 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 427 கனஅடியாகவும், ஆக. 8-ஆம் தேதி, 538 கனஅடியாகவும், ஆக. 9-ஆம் தேதி 702 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீா்மட்டம் மொத்தம் கொள்ளளவான 52 அடியில் 47.95 அடியாக உள்ளது. அணையிலிருந்து வலது, இடதுபுறக்கால்வாய்கள், ஊற்றுக்கால்வாய்களில் விநாடிக்கு 179 கனஅடி, தென்பெண்ணையாற்றிலிருந்து விநாடிக்கு 414 கனஅடி என மொத்தம் விநாடிக்கு 593 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக. 9-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மி.மீ):
கிருஷ்ணகிரி அணை - 5.6
கிருஷ்ணகிரி - 6
பெனுகொண்டாபுரம் - 13.2
போச்சம்பள்ளி - 21
பாரூா் - 21
ஊத்தங்கரை - 28
பாம்பாறு அணை - 70.