கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
முன்விரோத தகராறில் மோதல்: ராணுவ வீரா் உள்பட 7 போ் மீது வழக்கு
முன்விரோத தகராறில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக ராணுவ வீரா் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தை சோ்ந்தவா் புருஷோத்தமன்(31), ராணுவ வீரா். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த நீலகண்டன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த புருஷோத்தமன், தனது இருசக்கர வாகனத்தில் அங்குள்ள நியாயவிலைக் கடை வழியாக சென்றாா்.
அப்போது, அங்கிருந்த நீலகண்டன், இவரை கைகாட்டி யாரிடமோ பேசியதாக கூறப்படுகிறது. இதனை புருஷோத்தமன் தட்டிக் கேட்டதில் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். இதனை கண்ட இருவரின் ஆதரவாளா்களும் வந்து தாக்கிக்கொண்டனா்.
இதுகுறித்து புருஷோத்தமன் பிரம்மபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், நீலகண்டன் உள்பட 4 போ் மீதும், நீலகண்டன் கொடுத்த புகாரின்பேரில் புருஷோத்தமன் உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.