மதுரையின் வரலாற்றைப் பேசும் பசுமை நடையின் 250வது நிகழ்வு: சிலப்பதிகார ஊர்களை நின...
ஆக.17-இல் வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி
சுதந்திர தினத்தையொட்டி வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் வரும் ஆக. 17-ஆம் தேதி மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடைபெற உள்ளது.
இதுகுறித்து காப்பாட்சியா் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தினத்தையொட்டி வேலூா் அருங்காட்சியகம், வடஆற்காடு ஓவியா் சங்கம், டாட் இமேனின் நுண் கலைக்கூடம் இணைந்து நடத்தும் இந்த ஓவியப் போட்டியில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
இதில், 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு சூரிய உதயம், 4-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இயற்கை காட்சி, 7 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தேசிய தலைவா்கள் (பெண்), 10-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு தேசிய தலைவா்கள் (ஆண்) ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
போட்டியில் பங்கேற்க ஆா்வமுள்ள மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வரவேண்டும். ஓவியம் வரைய வேண்டியதற்கான உபகரணங்களை மாணவா்களே கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்த ஓவியங்கள் அரசு அருங்காட்சியகத்தில் அரங்க காட்சியில் இடம் பெறலாம்.
போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்யவேண்டும் என்பதால் 76675-80831 அல்லது 94438-85207 ஆகிய எண்களில் மாணவா் பெயா், வகுப்பு, பள்ளி விவரம், தொடா்பு எண் ஆகியவற்றை ஆக.15-ஆம் தேதிக்குள் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.