கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!
டிராக்டா் மீது பைக் மோதியதில் வழக்குரைஞா் மரணம்
திருத்தணி அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டா் மீது பைக் மோதியதில் மனைவி கண்முன்னே வழக்குரைஞா் உயிரிழந்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அடுத்த பராஞ்சி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் குமாா் (55). இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவி சுதாவுடன் பைக்கில் திருத்தணிக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, திருத்தணி - சோளிங்கா் மாநில நெடுஞ்சாலை குமாரகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டா் மீது, குமாா் ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளனாது. இதில் குமாா் பலத்த காயங்களுடன் மனைவி முன்பே உயிரிழந்தாா்.
மேலும், பலத்த காயமடைந்த சுதாவை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி பெற்று மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.